-
Cheap & Best Affordable Men’s Salon 11th new outlet at East Tambaram - January 16, 2021
-
The first 10 All New Nissan Magnite cars in Chennai rolled out from Autorelli Nissan, Nandanam in a grand convoy on Anna Salai - December 30, 2020
-
BARRACKS Resto Bar launch at Venkatanarayana Road, T.Nagar Party Troopers Alert, Plan your Christmas at Barracks a new hangout in the city! - December 28, 2020
-
Cheap & Best Affordable Mens Salon 10th new outlet at Ambattur - December 22, 2020
-
Grand Launch of Nakshatra Enclave & followed by fashion Show curated by Karun Raman with Actress Lakshmi Devy - December 15, 2020
-
“The Inside Story” Luxury Lingerie & Dressmakers inaugurated by fashion choreographer Karun Raman at Teynampet. - December 14, 2020
-
Chennai’s 1st Gaming Café – HUZZLE launched by Dr. Yashwanth Kumar Venkatraman( Honary Consulate of the Republic of El Salvador) & Ms. Kavitha Ramu IAS(Director Dept. Of ICDS Govt.of Tamilnadu) at Nungambakkam. - December 6, 2020
-
All New Nissan Magnite With the New HRA0 TURBO Engine Launched exclusively in Autorelli Nissan Showroom, Chennai By A G K Sathya Prakash (State Bank Of India – Deputy GM Tamilnadu) - December 3, 2020
-
Entrepreneurs from Coimbatore Launch ‘MY’ – India’s First Safety Lifestyle Company Launches personal protection products to redefine personal lifestyle - November 26, 2020
-
BIG Scoop Icecreams distributed by Paulsons Group to 200 Orphanage Kids at Prema Vasam, Gerugambakkam - November 26, 2020
மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்துங்கள்… வைகோ கோரிக்கை
சென்னை: சிபிஎஸ்இ பாடபிரிவில் படிக்காமல் மாநில பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மருத்துவ படிப்புகளுக்கு மே 6-ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மார்ச் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 2017, மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டபோது, ஏராளமான குளறுபடிகள் நடந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கேள்விகள் வினாத்தாள்களில் இடம் பெற்றன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழியைவிட குஜராத், மராத்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததால் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுத வந்த மாணவ மாணவியரிடம் சோதனை என்ற பெயரால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க செயல்கள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாயின. தேர்வு முடிவுகள் வெளி வந்த பின்னர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, வெளி மாநில மாணவர்கள் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 1269 பேர் இதுபோன்று சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு நடத்திய விசாரணையில், இருப்பிடச் சான்று முறையாக விசாரிக்கப்படாமலும், ஆவணங்கள் சரி பார்க்கப்படாமலும் கடந்த ஆண்டு, வெளிமாநில மாணவர்கள் 296 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட விவரம் வெட்டவெளிச்சம் ஆகியது. இதனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலைமை உருவானது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நீட் தேர்வு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படும் என்று கூறினார். அதற்கு அடுத்த நாளே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் மூலம்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி. மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்றனர். எனவே இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும். மேலும் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.