லீ பிக்சர்ஸ் தயாரிப்பில் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட் மிஸ்”

லீ பிக்சர்ஸ் தயாரிப்பில் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட் மிஸ்”

லீ பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்மிஸ்” இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ஆர் விக்னேஷ் . இவர் சில வருடங்களுக்கு முன்பு பசுபதி நடிப்பில் வெளியான TN 07 4777 என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்த படத்தில் கதாநாயகனாக வருண் நடிக்க, ஜெய்ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் ஸ்ரீநாத், ராகுல் தாத்தா, லொள்ளுசபா மனோகர், மொட்ட ராஜேந்திரன்,பப்லு (அறிமுகம்) ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இந்தப்படம் ஒரு கலகலப்பான கமர்சியல் படமாக உருவாகி வருகிறது.

ஐந்து பாடல்கள் இடம்பெறும் இந்த படத்திற்கு ஜெய்கிரிஷ் இசை அமைக்கிறார். இதில் இரண்டு பாடல்களை வித்தியாசமாக படமாக்கியுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். மேலும் ஒரு பாடல் பாங்காங்கில் படமாக்கப்பட்டுள்ளது படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் .விஜயமோகன்

காமெடி கலந்த காதல் கதையாக ஒரே நாளில் ஒரு பார்க்கில் நடக்கிற காதல் கூத்துக்கள் என இப்படத்தில் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார் இயக்குனர் ஆர்.விக்னேஷ். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெங்களூர் லால்பார்க், செம்மொழிப் பூங்கா மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:

எழுத்து – இயக்கம் : ஆர்.விக்னேஷ்

ஒளிப்பதிவு ; விஜய மோகன்

இசை ; ஜெய்கிரிஷ்

படத்தொகுப்பு ; ரமேஷ் பாபு

நடனம் ; தினேஷ், சதீஷ்

பாடல்கள் ; மணி அமுதன், பா .விஜய்

சண்டைப்பயிற்சி ; ஃபயர் கார்த்திக்

தயாரிப்பு நிர்வாகம் ; தி. பாக்கியசாமி

மக்கள் தொடர்பு ; செல்வரகு