2.0 திரைவிமர்சனம்

2.0 திரைவிமர்சனம்

சுத்தமான தரமான டைரக்டர் ஷங்கரின் படம், கதையின் கருவில் மிகுந்த சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும், கிராபிக்ஸ் மூலம் பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது ,இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு பக்கா மாஸ் ஆக அமைந்துள்ளது,

ரஜினி ரசிகர்கள் காட்டில் பெரும் மழை தான் , ஹாலிவுட் இயக்குனர்களுக்கு இந்தியர்கள் அதிலும் தமிழன் சளைத்தவன் அல்ல என்று இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்டைரக்டர் ஷங்கரின் மூளையில் உதித்த பிரம்மாண்ட சிந்தனை தான் இந்த பிரம்மாண்ட படம் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகளின் வேகம், கண்ணிமைக்கும் நேரத்தில் கிராபிக்ஸ் கலக்கல், விறுவிறுப்பான திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் ஸ்பீடாக நகர்கிறது, கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம் அவர்களை கையாண்ட விதம் சூப்பரோ சூப்பர்,

அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நடித்த நடிகர்கள் பாராட்டுக்குரியவர்கள, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயதானாலும் உன் நடையும் ஸ்டைலும் அப்படியே இருக்கு எனும் வசனத்தை உண்மையாக்கி உள்ளார் நம் சூப்பர் ஸ்டார், விஞ்ஞானியாக வரும் வசீகரன் நடிப்பில் ஒரு மைல் கல் ,சிட்டியாக வரும் இன்னொரு ரஜினி மாஸ் திரையரங்குகள் அதிர்கின்றன , பொம்மையாக வரும் குட்டி ரஜினி entry விசில் பறக்கிறது,

முந்தைய சில படங்களில் தொய்வாக சோர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தில் நான் யானை அல்ல குதிரை விழுந்தாலும் சட்டென எழுந்து ஓடுவேன் என்னும் தன் வசனத்தை செயலில் காட்டியிருக்கிறார், பழைய ரஜினிகாந்தின் ஸ்பீடும் ஸ்டைலையும் இதில் பார்க்க முடிந்தது ,அக்ஷய் குமார் தான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார், இந்த படத்தில் அக்ஷய்குமார் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் கதாநாயகன் ஆனால் படத்தில் வில்லன் ,ஏஆர் ரகுமான் இசை படத்தை விறுவிறுப்பாக இருக்கிறது, பாடல்கள் ஓகே தான் ,ரசூல் குட்டியின் ஒலி சேர்க்கை சூப்பர், படத்தின் துணை கதாபாத்திரங்கள் நடிப்பு பாராட்டுக்குரியது, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்க்க வேண்டிய படம் இந்த 2.0, மொத்தத்தில் இந்தியனாய் இரு, தமிழனாய் மீசையை முறுக்கு, என்பதை நிரூபித்திருக்கும் தரமான படம் இந்த 2.0

3.5 / 5

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

2.0 Public Review

Leave a Comment